ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

Messi – Antonella Roccuzzo தம்பதிக்கு 03வதும் ஆண் வாரிசு…



Messi – Antonella Roccuzzo தம்பதிக்கு 03வது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினாவின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்சி தற்போது பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகின்றார். இவர் கடந்த 2017 ஜூன் 30ல் அண்டோனெல்லா ரோகுஸோவை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். அதில் ஏற்கனவே 02 ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் லா லிகா தொடரில் பார்சிலோனா அணி மலாகா அணியை எதிர் கொள்கிறது. இதில் மெஸ்சி சொந்த காரணத்திற்காக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தன் மனைவிக்கு 03வது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். குழந்தைக்கு சிரோ என பெயரிட்டுள்ளார். மெஸ்சிக்கு ஏற்கனவே தியாகோ (2012), மேட்டியோ (2015) என்ற 02 ஆண் குழந்தைகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Image result for antonella roccuzzo messi 3rd baby

 

#####

 

Related posts

BCCI இனது கட்டாயத்தின் பேரில் மாலிங்க நாளை(28) ஐபிஎல் களத்தில்…

wpengine

பாராளுமன்ற அமைச்சர்களுக்கான உணவு வேளைகளின் விலை இன்று முதல் அதிகரிப்பு.. (விலைப் பட்டியல்)

wpengine

கோட்டா ஜனாதிபதியானால் ரணிலின் பதவி பறிபோகும் – மஹிந்த [VIDEO]

wpengine