உள்நாட்டு செய்திகள்

கண்டி மாவட்டத்தில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 161 சந்தேகநபர்கள் கைது….



கண்டி உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 230 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 161 சந்தேகநபர்கள் கண்டி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 69 சந்தேகநபர்கள் நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் தற்போது சுமூகமான சூழல் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தப் பகுதிகளில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

Related posts

போகம்பர : 7 கைதிகளுக்கு கொரோனா

wpengine

மிலேனியம் சவால் மனு விசாரணை ஜனவரியில்

wpengine

இன்னும் சில வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படும்

wpengine