உள்நாட்டு செய்திகள்

கண்டியில் தொடரும் ஊரடங்குச் சட்டம் – பொலிஸாரின் சகல விடுமுறைகளும் இரத்து…



கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று(07) பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று(08) பிற்பகல் 4.00 மணிவரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான சகல விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் விடுமுறையில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்களை, உடன் பணிக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரதேசத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, இராணுவத்தினரும், பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

Related posts

மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் –மொத்தம் 217 பேர் அடையாளம்

wpengine

சம்பந்தனிடம் இருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine

தேசபந்து தென்னகோனை கைது செய்து ஆஜர் செய்ய உத்தரவிடுக!

wpengine