ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தடை…



பாகிஸ்தானில் தாடியை பே‌ஷன் ஆக வெட்ட, முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இளைஞர்கள் ‘ஸ்டைல்‘ ஆக பல ‘பே‌ஷன்’களில் தாடி வளர்க்கின்றனர்.

ஆனால் பக்துன்கவா மாகாணத்தில் தாடியை பே‌ஷன் ஆக வெட்ட முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பலவித ‘பே‌ஷன்களில் தாடி வளர்ப்பது இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்பதால் தான் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என முடி திருத்தும் தொழிலாளர் சங்க தலைவர் ‌ஷரீப் காலு தெரிவித்துள்ளார்.

பக்துன் கவா மாகாணத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டனர். தங்கள் சலூன்களில் ‘பே‌ஷன்’ ஆக தாடி வெட்ட மாட்டோம் என நோட்டீஸ் ஒட்டியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Related posts

முஸ்லிம் வீடுகள் மீது தாக்குதல் (முழுவிபரம் இணைப்பு)

wpengine

இரகசியத்தை வெளியிட்டவர் மீது கடும் தாக்குதல்! புதிய சர்ச்சையில் அமைச்சர்

wpengine

ஆட்களை காணாமல் ஆக்கும் பிசாசுக் கடல் டிராகன்கள் வாழும் தீவா?

wpengine