உள்நாட்டு செய்திகள்

வருடாந்த இடமாற்றம் இன்று முதல் அமுலுக்கு…



உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாகப் பிற்போடப்பட்ட கிழக்கு மாகாண, இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம், இன்று(01) முதல் அமுலுக்கு வரவுள்ளதென, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஜே.ஜே. முரளிதரன், கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்றத்துக்காக ஏற்கெனவே கோரப்பட்ட விண்ணப்பத்துக்கமைவாக, மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவை, மொழிபெயர்ப்பாளர் சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சேவை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் சேவை, சாரதிகள் சேவை, அலுவலகப் பணிப்பாளர் சேவை என்பவற்றைச் சேர்ந்தவர்களே, வருடாந்த இடமாற்றத்துக்கு உட்பட்டுள்ளனர்.

#rishma

Related posts

பிரதமர் அலுவலகத்தில் தைப் பொங்கல் தினம் கொண்டாட்டம்

Azeem Kilabdeen

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

wpengine

பூஸ்டருக்கு WHO அனுமதி

wpengine