உள்நாட்டு செய்திகள்

Update – கைதான வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் விடுவிப்பு…



கைது செயப்பட்ட வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (28) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.

——————————————–  UPDATE

வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கைது…

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில், வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கபட்டிருந்தனர்.

இந்நிலையில், ரவிகரன் இன்று(28) முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில், அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் அவரை கைது செய்துள்ளதுடன், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

wpengine

பிணைமுறி விவாதம் குறித்து சபாநாயகரால் விசேட கோரிக்கை…

wpengine

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

wpengine