உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு குறித்த கோரிக்கை ஆராயப்படுகிறது…



சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து மேலும் ஆராய்வதற்கு வாழ்க்கைச் செலவு குழு நேற்று(27) மாலை கூடிய கூட்டத்தின் போது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது சமையல் எரிவாயு நிறுவனங்களினூடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை மற்றும் இலங்கை சந்தையில் எரிவாயுவின் விலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை தயார் செய்யுமாறு நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வாழ்க்கைச் செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

சமையல் எரிவாயு நிறுவனங்கள் 02 இனால் சமையல் எரிவாயுவின் விலையை 300 முதல் 400 ரூபா வரையில் அதிகரிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 

#rishma

Related posts

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி ஆலயத்திற்கு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை விஜயம்

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக 16 பேர் உயிரிழப்பு – 127,913 பேர் பாதிப்பு….

wpengine

பசிலுக்கு எதிரான வழக்கு நாளாந்தம் விசாரணைக்கு…

wpengine