ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும்?


இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ஆண்களின் விதைப்பைகள் பாதிக்கப்பட்டு, விந்தணு உற்பத்தி குறைக்கப்படுவதோடு, நெஞ்செரிச்சல் அதிகரிக்குமென்றும், தொடைத்தசைகளும் தோலும் பாதிக்கப்படுவதோடு, கால் நரம்புகளின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தசைகளும் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்ததால் அவரது கால்கள் பெருமளவு உணர்விழந்த சம்பவத்தை அடுத்து, இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் நரம்பியல் பாதிப்பு ஏற்படும் என்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது உறவினர் ஒருவர் வீடு மாற்றுவதற்கு உதவச்சென்ற பெயர் குறிப்பிடப்படாத அந்த பெண், இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல மணி நேரம் முழங்கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கிறார்.

அதனால் அவரது கால்களின் கீழ்ப்பகுதியில் உணர்விழந்துபோன நிலையில் அந்த பெண் திடீரென மயங்கி விழுந்துவிட ஆபத்து அதிகமானது. அவரது கால்களின் கீழ்ப்பகுதி பெருமளவு வீங்கியிருந்ததால் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் கழற்ற முடியாமல் அதை அவசர அவசரமாக வெட்டி எடுக்க வேணிய அளவுக்கு நிலைமை விபரீதமானது.

Related posts

மாகந்துரே மதூஷ் உடன் சுமார் அரசியல்வாதிகள் 80 பேர் தொடர்பு – SB இனது கணிப்பும் சரியானது…

wpengine

டோனி சளையாது

wpengine

இலங்கை – இந்திய வெற்றியின் பின்னணியில் ரசிகர்கள் சூதாட்டம்.. மூவர் கைது..

wpengine