உள்நாட்டு செய்திகள்

பசிலுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைக்கு தினம் குறிப்பு…



முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இரும்புக் குழாய்களை கொள்வனவு செய்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கியதன் ஊடாக 365 லட்சம் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்க இன்று(23) கொழும்பு நீதவான் நீதிமன்றினால் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் 06 ஆம் திகதி இருந்து சாட்சிப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு நீதவான் இன்று(23) பணிப்புரை விடுத்தார்.

முன்னாள் பொருளாதார அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் கித்சிறி ரணவக்கவுக்கும் எதிராக, சட்டமா அதிபரினால் குறித்த இந்த வழங்கு கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

முறைப்பாடுகளை பதிவுசெய்ய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 10 பேருக்கும் பிணை

wpengine

அமைச்சர் விஜயதாசவுக்கு பதவி விலக 17ம் திகதி வரை கால அவகாசம்..

wpengine