உள்நாட்டு செய்திகள்

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி குறித்த அறிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 20 -23ம் தினங்களுக்குள்..



பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் மீதான பாராளுமன்ற விதானம் எதிர்வரும் மார்ச் மாதம் 20 அல்லது 23ம் திகதிகளில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சித் தலைவர்களுடன் இது குறித்து கலந்துரையாடி தினம் குறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த அறிக்கைகளின் பிரதி தமிழில் இல்லாமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டதன் காரணமாக, கடந்த 21ம் திகதி நடைபெற இருந்த குறித்த பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் மீதான விவாதம் ஒத்திவைக்கபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

இந்நாள் அரசில் அரசியல் பழிவாங்கல்கள் இருக்காது

wpengine

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கலைப்பு – விஷேட அதிரடிப்படையினர் இணைப்பு

wpengine

வடக்கை இலக்கு வைத்து அபிவிருத்திற்காக சீன உதவி

wpengine