உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கையை வந்தடைந்தார்…



இலண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கையை வந்தடைந்துள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணி இடைநிறுத்தம் செய்ய இலங்கை வௌிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு அந்த பணி நிறுத்த உத்தரவை இரத்து செய்தார்.

இந்நிலையில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை நாட்டுக்கு அழைத்து விளக்கம் கேட்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. அதன்படி அவர் இன்று நாடு திரும்பியுள்ளார்.

 

 

#rishma

Related posts

விவசாய அமைச்சின் செயலாளர் இராஜினாமா

wpengine

ஜனாதிபதி ஊடக பிரிவு பிரதானி பதவியிலிருந்து இராஜினாமா

wpengine

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..

wpengine