கேளிக்கை

காதல் தோல்வியில் இருந்து சகஜ நிலைக்கு வர அவர்தான் காரணம் – மனம்திறந்த தீபிகா…



ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தீபிகா படுகோனே காதல் தோல்வியில் இருந்து மீண்டது எப்படி? என்பது குறித்து கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் நடந்த தொழில்நுட்ப காங்கிரஸ் மாநாட்டில் தொழில் நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நாளான நேற்று பிரபல இந்தி நடிகையான தீபிகாபடுகோனே கலந்து கொண்டார்.

அப்போது ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தளர்ச்சி ஏற்படும். 2014-ம் ஆண்டு காதல் தோல்வியால் விரக்தி அடைந்திருந்தேன். வாழ்க்கை முடிந்து போய்விட்டது என்றே நினைத்தேன். அதில் இருந்து மீண்டு வருவதற்கு எனது அம்மாதான் காரணம். அவர்தான் எனக்கு இருந்த பிரச்சினையை கண்டுபிடித்து ஆறுதலும், ஊக்கமும் அளித்து நம்பிக்கை ஊட்டினார்.

நான் மீண்டும் சகஜ நிலைக்கு வருவதற்கு அவர்தான் காரணம். மேலும் டாக்டர்களின் அறிவுரைகளும் உதவிகரமாக இருந்தது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் ஏதாவது பிரச்சினையில் இருக்கிறார்களா? என்பதை கவனித்து அதை சரி செய்ய வேண்டும்.

பிள்ளைகள் தங்களது பிரச்சினைகளை பெற்றோரிடம் சுதந்திரமாக கூறும் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் ஏன் தீபிகா படுகோன் கூறியுள்ளார்.

தீபிகா படுகோனே தற்போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

15 நிமிடம் நடனம் ஆட ரூ.5 கோடி கேட்ட பிரபல நடிகர்…

wpengine

நடிப்புக்கு முழுக்குபோட்ட ஸ்ருதியின் அடுத்த திட்டம்…

wpengine

உலகின் பல முன்னணி சர்வதேச ஊடகங்களை தன்வசப்படுத்தி மாரா மார்டின்…

wpengine