விளையாட்டு

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றியது…



தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் நேற்று(13) இடம்பெற்ற 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 73 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 4:1 என்ற ரீதியில் கைப்பற்றியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பொடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களையும்,  பதிலளித்த தென்னாபிரிக்க அணி 42.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணி முதல் முறையாக ஒருநாள் போட்டித் தொடர் ஒன்றை வெற்றி கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rish

Related posts

நேரடியாக உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெறுமா இலங்கை அணி..? பாகிஸ்தான் அணியால் அச்சுறுத்தல்..

wpengine

மலிங்க அடம்பிடிக்கிறார் இலங்கை மருத்துவர் குற்றச்சாட்டு

wpengine

ஒலிம்பிக் : பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

wpengine