உலக செய்திகள்

டென்மார்க் இளவரசர் உலகை விட்டுப் பிரிந்தார்…



டென்மார்க் அரசி மார்கரெட்டின் கணவரான இளவரசர் ஹென்றிக் உடல் நலக்குறைவால் நேற்று(13) மரணமடைந்தார் என அரச மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

டென்மார்க் அரசியாக இருந்து வருபவர் மார்க்ரெட். இவரது கணவர் இளவரசர் ஹென்றிக். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 83 வயதான ஹென்றிக் கடந்த சில மாதங்களாக மூளை கட்டி நோயாலும், உடல் நலக்குறைவாலும் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, கோபன்ஹேகனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(13) மரணமடைந்தார் என அரண்மனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எங்கள் மதிப்புக்குரிய இளவரசர் ஹென்றிக் ஆழ்ந்த உறக்கத்திலேயே மரணம் அடைந்தார் என தெரிவித்துள்ளது.

#rish

Related posts

காய்கறி சந்தையில் தீ விபத்து – 15 பேர் உயிரிழப்பு…

wpengine

கொரோனாவின் கோரத்தாண்டவம் – அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை

wpengine

இந்தியாவில் 70-ஆவது குடியரசு தினம் இன்று(26)…

wpengine