உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஆராய குழு…



நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஆராய்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் நேற்றிரவு(13) கொழும்பு – 07 இல் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களான, கபீர் ஹாசீம், சரத் பொன்சேகா, ரிசாட் பதியூதீன், ஹரின் பெர்ணான்டோ , சாகல ரத்னாயக்க உள்ளிட்ட பலர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் , ஐக்கிய அமெரிக்க குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை சந்தித்து நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தனி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான இணக்கப்பாடு அலரிமாளிகையில் நேற்று(13) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான திகதி தொடர்பில் அறிவிப்பு..!

wpengine

ஜனாதிபதி மற்றும் துருக்கி தூதுவருக்கிடையிலான சந்திப்பு

wpengine

அவன்ட் கார்ட், ரக்னா லங்கா மோசடிகளில் முக்கிய சாட்சி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

wpengine