உள்நாட்டு செய்திகள்

சைட்டம் குறித்த தீர்வுத் திட்டத்தினை ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானம்…



சைட்டம் நிறுவனத்தின் மாணவர்களது பிரச்சினை குறித்து ஆராய்ந்து அது குறித்து தொகுக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த சங்கத்தின் ஊடகக் குழுவின் உறுப்பினர் டாக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவிக்கையில்,

சைட்டம் நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு வைத்திய பட்டத்தினை பெறக்கூடிய வகையில் குறித்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதற்கு அநேகமான தரப்பினர் உடன்பட்டிருப்பதாகவும், குறிப்பாணை போன்ற வடிவில் ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் பிரசாத் கொலம்பகே குறிப்பிட்டிருந்தார்.

 

#rishma

Related posts

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தோன்றி புதிய சர்ச்சை

wpengine

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாலிங்க மற்றும் மஹேல.. – அம்பானியின் விசேட விமானம் இருவருக்குமே… [PHOTOS]

wpengine

மணல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு…

wpengine