ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிக்கைகளை பிரசுரிக்க தேர்தல் ஆணையாளரால் தடை…



நடைபெற்று வரும் உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடியும் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிமசிங்க ஆகியோரால் வெளியிடும் எந்த அறிக்கைகளையும் வெளியிடக் கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.

நேற்று(09) ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தலிலேயே குறித்த இந்தக் உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அல்லது பிரதமர் தேசிய பாதுகாப்பு தொடர்பானதோ அல்லது திடீர் அவசர நிலை தொடர்பாகவோ – அல்லது வேறு எந்த அறிக்கையை வெளியிட்டாலும், அதனை பிரசுரிக்கவோ, ஒலி, ஒளிபரப்பவோ கூடாது.

இன்று(10) மாலை 4 மணியளவில் வாக்களிப்பு முடியும் வரை குறித்த இந்த தடை நடைமுறையில் இருக்கும் என அவர் மேலும் அறிவித்துள்ளார்.

 

#rishma…

Related posts

அனைத்து பாடசாலைகளிலும் மைத்திரி

wpengine

‘சிரச’வுக்கு தாக்குதல்… (Photos)

wpengine

கழிவறை கட்டாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

wpengine