உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிரான இலஞ்ச முறைப்பாடு..



நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் நாளை(09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை முன்வைக்க தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் இலங்கை பிரஜை இல்லாத ஒருவருக்கு மத்திய வங்கியின் ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்தும், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரினால் குறித்த அமைச்சில் இடம்பெறும் இலஞ்ச மற்றும் ஊழல்கள் தொடர்பிலும் குறித்த இயக்கத்தினால் ஜனாதிபதிக்கு எதிராக இவ்வாறு இலஞ்சம் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சுக்கு உரித்தான அதன் பிரதி அமைச்சர் அனுராதா ஜயரத்ன மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் துணை அத்தியட்சகருக்கு எதிராகவும் முறைப்படுகளை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

#rishma

Related posts

நிலவும் வறட்சியின் காரணமாக களுத்துறையில் குடிநீர் பிரச்சினை…

wpengine

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம்..

wpengine

மஹாநாம மற்றும் திஸாநாயக்கவுக்கு எதிராக நிரந்தர விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு

wpengine