உள்நாட்டு செய்திகள்

04 நாடுகளிலிருந்து சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை…



04 நாடுகளிலிருந்து சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைகளுக்காக கொழும்பிலிருந்து விசேட குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்று(08) செல்லவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், விசேட இணைப்பாளர்களாக கடமையாற்றவுள்ள தெரிவத்தாட்சி அலுவலர்களே இவ்வாறு செல்லவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் வாக்குப்பதிவு நிலையங்களை ஒருங்கிணைப்பதற்காக 400 அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரச வாகனங்களை உடனடியாக விடுவிக்குமாறும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசின் புதிய வரிச் சட்டத்திற்கு எதிராக பந்துல குணவர்தன வழக்கு..

wpengine

அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கும் கிடைக்கும் வாய்ப்பு

wpengine

சம்பள பிரச்சினை : ஆராய ஐவரடங்கிய குழு

wpengine