உள்நாட்டு செய்திகள்

உமா ஓயா திட்டத்திற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் தெரிவிப்பு..



உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அறிக்கை மகாவெலி அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று(07) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பயிர்ச் செய்கை மற்றும் வீடுகளுக்கு வழங்கப்பட்ட நட்டஈடு கொடுப்பனவு மற்றும் வெள்ள நீர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உமா ஓயா திட்டத்திற்கு எதிராக பண்டாரவளை பகுதியில் வசிக்கும் சிலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் இது தொடர்பாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு மார்ச் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 

#riz

Related posts

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

அவசர நிலையினை சமாளிக்கும் வகையில் இராணுவத்தினர் தயார்நிலையில் – மேஜர் ஜெனரல் மகேஸ்

wpengine

தொழிலாளர் தினத்தில் 45மில்லியன் ரூபாய்களை சம்பாதித்தது இ.போ.சபை

wpengine