உலக செய்திகள்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தலைமை நீதிபதி கைது…



மாலைதீவில் முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல் கயூம் மற்றும் தலைமை நீதிபதி அப்துல்லா சயீட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாலைதீவு அரசாங்கம் 15 நாட்கள் அவசர நிலையை பிரகடனம் செய்திருந்தது.

சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்களை விடுவிக்குமாறு அண்மையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த ஜனாதிபதி யாமீன் பதவி விலக வேண்டும் என மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்

இந்நிலையிலேயே அங்கு அவசர கால நிலைமை நேற்று(05) பிரகடனப்படுத்தப்பட்டதுடன். எதிர்கட்சி உறுப்பினர்களை கைது செய்யும் வகையில் இராணுவம் செயற்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல் கயூமின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

Related posts

சர்ச்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து!

News Editor

பப்புவா நியூ கினியாவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்..!

wpengine

அரசியல் சாசனத்தில் உள்ள உரிமைகளை எனது நிர்வாகம் பாதுகாக்கும்

wpengine