உள்நாட்டு செய்திகள்

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி விளக்கமறியலில்…



கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்கின்ற விசாரணைகளுக்கு அமைவாக கடந்த 01ம் திகதி அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நேற்று கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாமலுக்கு எதிரான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு.

wpengine

டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம்

wpengine

மன்மோகன் சிங் மறைவுக்கு ரிஷாட் இரங்கல்

Azeem Kilabdeen