உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா நீதிமன்றில் சரண்…



முஹம்மத் முஸம்மிலுக்கு 42 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, 8 வருட காலங்கள் நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகாது தலைமறைவாகி இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா சட்டத்தரணி ஊடாக இன்று(02) கொழும்பு மேல் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி பொது வேட்பாளராக முன்னின்ற சரத் பொன்சேகாவிற்கு கட்சியினூடாக மக்கள் ஆதரவாக வேலை செய்ய வேண்டும் என முஹம்மத் முஸம்மிலுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக மயோன் முஸ்தபா மீது குற்றஞ் சாட்டப்பட்டிருந்து.

அவருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மயோன் முஸ்தபா இவ்வாறு நீதிமன்றிற்கு சரணடைந்துள்ளார்.

 

#rishma

Related posts

தெரிவுக் குழு முன்னிலையில் இரண்டாவது தடவையாகவும் இராணுவத் தளபதி

wpengine

இன்று மாலைக்குள் வழமைக்கு திரும்பும்

wpengine

பளை பகுதியில் மேலும் இருவர் கைது

wpengine