கேளிக்கை

பிரபல நடிகை Zeenat Aman இனால் பாலியல் முறைப்பாடு…



மும்பையில் வசித்து வரும் நடிகை ஜீனத் அமன் (zeenat aman)அண்மையில் பொலிசில் பாலியல் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

நடிகை ஜீனத் அமன் என்பவர் 1970 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் பல படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். இவர் தனது நடிப்பு திறமைக்காக 3 முறை பிலிம்பேர் விருது (Filmfare Award) மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இந்தி சினிமாவில் நுழைவதற்கு முன் ‘மிஸ் இந்தியா’ போட்டியில் கலந்து கொண்டு 3-ம் இடம் பிடித்தவர். மேலும் மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தையும் வென்றெடுத்தவர்.

தற்போது 66 வயதாகும் ஜீனத் அமன் மும்பை ஜூகு பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு முறைப்பாடு ஒன்றை அளித்து உள்ளார். அதில், தனது குடும்ப நண்பரும், தொழில் அதிபருமான அமர்கன்னா என்பவர் தன்னை மானபங்கம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

 

#g-reeshma

Related posts

இவ்வாண்டுக்கான நகைச்சுவை வனவிலங்கு புகைப்படங்கள் சில [PHOTOS]

wpengine

Africa Photographer of the year 2018 இறுதி 20 புகைப்படங்களில் லக்ஷிதவின் Swinging time…

wpengine

சிம்பு – கார்த்தி இணையும் முதல் படம் [VIDEO]

wpengine