ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

7 வயதுவரை பன்றி தொழுவத்தில் வாழ்ந்த சிறுவன்… தாய்க்கு பயந்து தந்தை செய்த காரியம்!..



சீனாவில் 7 வயது வரை பன்றித் தொழுவத்தில் வாழ்ந்து வந்த சிறுவனொருவன் தொண்டு நிறுவனங்களால் மீட்கப்பட்டுள்ளான்.

சினாவின் ஹெனான் மாகாணத்தின் புயாங் நகரத்தில் உள்ள பன்றித் தொழுவமொன்றிலிருந்தே ஹோங்போ என்ற குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறித்த சிறுவனின் தந்தை பன்றி பண்ணை நடத்தி வருகின்றார். அவனது தாய் மனநிலம் பாதிக்கப்பட்டவராவார்.

இதனால் இந்த குடும்பம் தனித்து வாழ்ந்து வந்தது. எனவே இந்த குழந்தையை அவனது தந்தை பன்றி தொழுவத்தில் வைத்தே வளர்த்துள்ளார்.

குறித்த சிறுவன் இந்த நிலையில் வாழ்ந்து வருவது தொடர்பில் அந்நாட்டு பத்திரிகையொன்றில் செய்தி வந்துள்ளது. பின்னர் அங்கு பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் அந்த சிறுவனை அங்கிருந்த மீட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் அப்பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த சிறுவனின் வீட்டில் மொத்தம் 5 பிள்ளைகள். இதில் முதல் மூன்று பேரும் அவனது தாயால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

மற்றுமொருவர் அவரது உறவினரின் வீட்டில் வாழ்ந்து வருகின்றான். இந்த சிறுவன் சில சமயங்களில் தனது தயாரால் அடி தாக்குதல்களுக்கு உள்ளாகின்றான் என்று தெரிவித்தனர்.

 

Related posts

கஞ்சிபான இம்ரானின் வாக்குமூலங்களை வெளியிட வேண்டாம் என உயர் மட்டங்கள் அழுத்தம்..

wpengine

சன்னி லியோனின் ஆணுறை விளம்பரத்திற்க்கு கடும் எதிர்ப்பு!

wpengine

இந்திய புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு சனத் மற்றும் இரு வீரர்களுக்கு அழைப்பு..

wpengine