உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் காலநிலையில் மாற்றம்…



நாட்டில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் நாளை(27) முதல் மாற்றம் நிலவக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் ஹம்பாந்தோட்டை , காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு கடற்கரையோரங்களில் 40 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வேகத்தில் காற்றுவீசக்கூடும் எனவும் வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் குளிரான காலநிலை இரவு மற்றும் காலை வேளைகளில் காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தென் கிழக்கு கடற்கரையோரங்களில் அடுத்துவரும் சில நாட்கள் காற்று மற்றும் மழை அதிகரிக்ககூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 117வாக்குகளுடன் பிரேரணை நிறைவேற்றம்..

wpengine

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதி முன்னிலையில்…

wpengine

இனப்பிரச்சினை தீர்வின் போது, முஸ்லிம்களுக்கான தீர்வு உள்ளடக்கப்படாவிட்டால் அது முழுமையாகாது..!

wpengine