வணிகம்

வில்பத்து தேசிய வனப்பூங்காவின் வருமானம் 5 கோடி ரூபாய்…



வில்பத்து தேசிய வனப்பூங்காவை பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகளால் கடந்த வருடம் 57,650,034 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக குறித்த பூங்காவின் பொறுப்பதிகாரி சமத் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் ஏற்பட்ட கடும் வரட்சியையும் பொருட்படுத்தாது 49,114 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 26,612 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வில்பத்து தேசிய வனத்தைப் பார்வையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் கடந்தாண்டு ஜுலை மாதத்தில் 12,131,219 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும், இதற்கமைய கடந்தாண்டின் மொத்த வருமானம் 57,650,034 ரூபாய் என்றும் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

####

Related posts

வாகன விலைகளும் அதிகரிக்கப்படும் – வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ..

wpengine

லுலு சர்வதேச நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் இலங்கையிலும்..

wpengine

மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி….

wpengine