உள்நாட்டு செய்திகள்

பொல்கஹவெல மேம்பாலம் பொதுமக்களின் பாவனைக்காக நாளை திறப்பு…



பொல்கஹவெல மேம்பாலம் பொதுமக்களின் பாவனைக்காக நாளை(17) திறக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

புகையிரத போக்குவரத்துக் காரணமாக நாளாந்தம் 4 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட மணித்தியாலங்கள் பொல்கஹவெல வீதி மூடப்படுவதனால், வாகன நெரிசல் ஏற்படுவதன் காரணமாக இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தின் நீளம் 353 மீற்றர்களாகும் எனவும் இதன் நிர்மாணப்பணிகளுக்கு 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் புதிய ரயில், அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகள் சேவை ஆரம்பம்!

News Editor

நாட்டின் பல மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்…

wpengine

அதிவேக வீதியில் வாகனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு…

wpengine