உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் இருந்து யாழ் சென்ற ரயில் தீப்பற்றியது…



இன்று(15) அதிகாலை 5.45 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ். நோக்கி புறப்பட்ட அதிவேக சொகுசுரயிலில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இயந்திர கோளாறு காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(15) நண்பகல் 12.30 மணியளவில் சாவகச்சேரி, மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ரயில் சென்று கொண்டிருந்த போது புகையிரதத்தின் இயந்திர பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், பேருந்துகளில் தமது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து குறித்து யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து ரயில் யாழ். ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளது.

Related posts

மரணதண்டனையினை நிறைவேற்றல் குறித்து விரைவில் ஜனாதிபதியிடமிருந்து அறிவிப்பு

wpengine

கடந்த 24 மணித்தியாலங்களில் 363 பேர் கைது

wpengine

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை…

wpengine