உள்நாட்டு செய்திகள்

கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள புதிய மாணவர்கள்…



கல்வியியல் கல்லூரிக்கு இவ்வாண்டில் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வருட கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி தலைமை ஆணையாளர் கே.எஸ்.பண்டார தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆரம்பக்கல்விக்காக இம்முறை பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

கல்லூரியில் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 3 ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நாடுமுழுவதிலும் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளில் 8 ஆயிரத்து 500 மாணவர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரிஷ் வழக்கிலிருந்து நீதிபதி ஒருவர் விலகல்

Azeem Kilabdeen

அரசின் முடிவுகளால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரும்.. – கெமுனு அரசுக்கு எச்சரிக்கை..

wpengine

வெளியாரின் பங்களிப்பு இல்லாவிடின் 3 நிறுவனங்களும் மூடப்படும் – பிரதமர் எச்சரிக்கை.

wpengine