உள்நாட்டு செய்திகள்

சிங்கப்பூர் பிரதமர் மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கை விஜயம்…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஷ்சியன் லூங்க் (lee hsien loong) மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடொ (Joko Widodo)அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி சிங்கப்பூர் பிரதமர் இலங்கை வரவுள்ள நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி இந்தோனேசியா ஜனாதிபதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.

இதன்போது அவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தபால் ஊழியர்கள் கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

wpengine

தலபூட்டுவா’வின் உடற்பாகங்கள் DNA பரிசோதனைக்கு..

wpengine

இலங்கையில் இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நீக்க நடவடிக்கை..!

wpengine