உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மைத்திரியின் பதவிக் காலம் தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய குழு…



தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் 06 வருடங்களா அல்லது 05 வருடங்களா என்பது குறித்து ஆராய, ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர், 19வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினார். இதற்கமைய, ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 வருடங்கள். முன்னதாக, இலங்கை ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் 06 வருடங்களாகும்.

எனவே, மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் தற்போதுள்ள திருத்தத்திற்கு அமையவா அல்லது முன்னரான அரசியலமைப்பின் பிரகாரத்தின் அடிப்படையிலானதா? என்கிற விடயத்தை ஆராயும் நோக்கில் உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி கருத்துக் கோரியுள்ள நிலையிலேயே குறித்த குழுவை பிரதம நீதியரசர் பிரியசாத் டேப் நியமித்துள்ளார்.

 

#reeshma

Related posts

நாடு முழுவதும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

wpengine

ஹட்டனில் மாணவர்களும், பெற்றோரும் போராட்டம்

wpengine

இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணை – மஹிந்த அமரவீர…

wpengine