உள்நாட்டு செய்திகள்

உமாஓய வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை…



உமாஓய வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்தி அதன் பயனை மக்களுக்கு பெற்று கொடுக்குமாறு ஜனாதிபதி, மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று(௦9) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்போது, எதிர்காலத்தில் உரிய காலத்தில் மழை பெறப்படாமையினால் நாட்டில் ஏற்படக்கூடிய வரட்சி நிலையை இனங்கண்டு அதனை எதிர்கொள்ளக்கூடியவாறு விவசாய மற்றும் உணவு உற்பத்தி துறைகளில் திட்டமிடுவதற்கு நிபுணர்களின் குழுவொன்றினை நியமிக்கவும் ஜனாதிபதி இதன்போது அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

ரயில் தடம்புரள்வு : சேவையில் பாதிப்பு

wpengine

மீண்டும் எரிபொருள் வரிசைகள் அதிகரிக்க காரணம் என்ன ?

wpengine

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை கூட்ட முடியாது

wpengine