விளையாட்டு

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வைத்தியசாலையில்…



தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவிந்த்ர ஜடேஜா விளையாடுவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் தகவல்கள் தெரிவிகிக்கின்றன.

குறித்த இந்த போட்டி கேப்டவுனில் நாளை(05) ஆரம்பமாகிறது.

இந்நிலையில் ஜடேஜா கடந்த இரண்டு தினங்களாக வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஊடக அறிக்கை ஒன்றில் குறித்த இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 48 மணித்தியாலங்களுள் அவர் குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரை முதலாவது டெஸ்ட்டில் இணைப்பதா? இல்லையா? என்பது குறித்து போட்டி நடைபெறும் தினமான நாளை(05) காலையிலேயே தீர்மானிக்கப்படும் என, இந்திய கிரிக்கெட் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

#reeshma

Related posts

நடைபவனி சென்ற மஹேலவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த தமிழ் யுவதி… (Photos)

wpengine

இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் தொடருக்காக சென்னைக்கு

wpengine

சன்ரைசஸ் அணியின் தலைமையில் இருந்து வார்னர் விலகல்…

wpengine