ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘தாம் எதிர்ப்பில்லை’ – முன்னாள் ஜனாதிபதியிடம் இருந்து கடிதம்.. (PHOTO)



எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு அரசியல் கட்சியோ, சுயேட்சைக் குழுவோ, சுவரொட்டிகள், பதாதைகளில் தமது படத்தைப் பயன்படுத்துவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகள் தமது படத்தை சுவரொட்டிகள், பதாதைகளில் பயன்படுத்தி வருவதை தாம் அறிந்திருப்பதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தல் சட்டத்தை மீறி எவரேனும், தனது படங்களை பயன்படுத்தி பரப்புரைகளைச் செய்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது தேர்தல் ஆணைக்குழுவைப் பொறுத்த விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#reeshma

Related posts

சுதந்திர முன்னணியின் அதாவுத மற்றும் ஏகநாயக்க சஜித்திற்கு ஆதரவு [PHOTOS]

wpengine

SLPP இல் பாலியல் இலஞ்சம் வழங்கினால் போட்டியிடலாம் : மதுஷா

wpengine

மைத்திரிக்கு எதிராக பொன்சேகா உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்…

wpengine