விளையாட்டு

IPL இல் விளையாட பென் ஸ்ரோக்ஸ் இற்கு அனுமதி…



இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரரான பென் ஸ்ரோக்ஸ் இற்கு இந்திய பிரிமியர் லீக்கில் (IPL) விளையாடுவதற்கான அனுமதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் இரவு கேளிக்கை விடுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்த, நிலையில் இங்கிலாந்து அணியின் அவுஸ்ரேலிய தொடரில் அவர் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

26 வயதான பென் ஸ்ரோக்ஸ், கடந்த வருட இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் ‘பஞ்சாப் சுப்பர் ஜயன்ட்’அணிக்காக அதிகூடிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டிற்கான இந்திய பிரிமியர் லீக்கிற்கான கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் ஏலம், இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ளது.

இந்த வருட இந்திய பிரிமியர் லீக் போட்டித் தொடர் ஏப்பிரல் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

####

Related posts

இங்கிலாந்து – இலங்கை போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமம் MTV தொலைக்காட்சி அலைவரிசைக்கு…

wpengine

நமக்கு நம்பிக்கை தீனி போட்டவர் டோனி – ரஹானே

wpengine

வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்று

wpengine