ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முதல் தடவையாக ஹம்பாந்​தோட்டை மாகம்புற துறைமுகத்தில் சீன’க் கொடி.. இலங்கை கொடியின் உயரமும் குறைப்பு..



2018ம் ஆண்டில் நேற்று கால்பதித்திருக்கையில் ஹம்பாந்​தோட்டை மாகம்புற துறைமுகத்தில் நேற்று(01) காலை சீனா நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

குறித்த துறைமுகமானது டிசம்பர் மாதம் 9ஆம் திகதி சைனா மார்சன்ட் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக நேற்று சீனாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அங்கு எமது நாட்டின் தேசியக்கொடி மற்றும் துறைமுக அதிகார சபையின் கொடி என்பன ஏற்றப்பட்டிருந்ததுடன்,இலங்கையின் தேசியக்கொடி ஏனைய கொடிகளை விட ஒன்றரை அடி உயரத்தில் ஏற்றப்பட்டிருந்தது.

எனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கையின் கொடியின் உயரம் குறைக்கப்பட்டு ஏனைய கொடிகளின் உயரத்துக்கு சமனாக கொண்டு வரப்பட்டுள்ளது.

#G-rizmira

Related posts

முஸ்லிம்களது நலன் கருதியே சிறையில் ‘ஜம்பர்’ அணிந்தேன்.. – மறுத்திருந்தால் விளைவுகளை சந்திக்க நேரிட்டிருக்கும்…

wpengine

நாட்டின் நிலைமைக்கு அமைய முழுமையாக முகத்தினை மறைக்கும் தலைக்கவசத்திற்கு கட்டுப்பாட்டு விதி…

wpengine

தளபதி ரசிகர்களுக்கு விஜய் டிவியின் ‘ஸ்பெஷல்’ விருந்து

wpengine