உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தபால் ஊழியர்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்…



தபால் தொழிற்சங்க முன்னணியானது நாளை(27) தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

தபால் திணைக்களத்துக்கு புதியவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கொள்கை ஒன்றை வகுப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்ந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டின் சகல மாவட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு பிரதான நகரங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்க அமைவாக எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர் ஏதாவது ஒர் தினத்தில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுமானால், வாக்காளர் அட்டை விநியோகம் உள்ளிட்ட பல விடயங்களுக்கு பாதிப்புக்களின் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்க முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.

#reeshma..

Related posts

பால்மா விலை சடுதியாக அதிகரிப்பு..!

wpengine

“எழுச்சி பெறும் பொலன்னறுவை” 180 அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்…

wpengine

என்னோடும் பசிலோடும் சேர்த்து 6 பேர் SLPP சார்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கு விண்ணப்பிக்கத் தயார் – நாமல்

wpengine