உள்நாட்டு செய்திகள்

மழையுடனான காலநிலை தொடரும்…



வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலைமை காரணமாக, இன்றைய தினமும்(21) மழையுடனான காலநிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கும் 100mm அளவில் மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் குறித்த அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையின் ஆழ்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 – 80Km வரையில் வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அந்த நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Related posts

வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வு!

wpengine

இலங்கையில் இருந்த ஒரேயொரு குழந்தை கதிரியக்க நிபுணரும் நாட்டைவிட்டு வெளியேறினார்..!

wpengine

வனவிலங்கு நிதியத்தை மூட அமைச்சரவை அனுமதி

wpengine