உள்நாட்டு செய்திகள்

மண்சரிவால் ஸ்தம்பிதமடைந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு…



மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் மூன்று மணித்தியாலயங்கள் வரை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை – கொழும்பு பிரதான ரயில் பாதையில் தலவாக்கலை புகையிரத நிலையத்தின் சுரங்கப் பகுதிக்கு அருகாமையில், நேற்றிரவு(20) இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு நேர தபால் ரயில், தலவாக்கலை புகையிரத நிலையத்தில் சுமார் ஒரு மணித்தியாலயம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இன்று 21) அதிகாலை ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையகத்திற்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக, தலவாக்கலை ரயில் நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Related posts

ஊடகவியலாளர் லசந்த கொலையின் சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

பிக்குகள் சங்கத்தை விட்டு விலகிச் செல்லும் நிலை – விகாரைகள் மூடும் அபாயம்

wpengine

சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு..!

wpengine