உலக செய்திகள்

பிலிப்பைன்சில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு…



பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பிலிரான் தீவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பிலிரான் தீவுப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் கடும் மழை பெய்து வருகின்றது. கை டாக் புயல் காரணமாக பெய்து வரும் கடும் மழையால் சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 30-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் மழை காரணமாக போக்குவரத்து பாதிகப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிக்கினார் ட்ரம்ப்

wpengine

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி..!

wpengine

500 மில்லியனுக்கும் மேலானோர் பாவிக்கும் web browser இனை கூகுள் நிறுவனம் நீக்கம்..

wpengine