உள்நாட்டு செய்திகள்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்…



மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மற்றும் அபாய வலயங்களில் வாழும் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மீதொட்டமுல்ல திண்ம கழிவு வெளியேற்றும் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினை தொடர்ந்து தேசிய கட்டட பரிசீலனை அமைப்பினால் அடையாளப்படுத்தப்பட்ட அனர்த்த வலயத்தின் வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகள் அமைந்துள்ள காணிகளை அரசாங்கத்துக்கு உரித்தாக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய காணிகளின் உரிமையாளர்கள் 110 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், குறித்த உரிமையாளர்களுக்கு மதிப்பீட்டு பெறுமதியினை நட்டஈடாக செலுத்துவது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

பசில் ராஜபக்ஷவின் மனைவிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

wpengine

பொய்ப் பிரச்சாரங்களாலேயே சிறுநீரக மாற்றுச் சிகிச்சை நிறுத்தப்பட்டது – டாக்டர் அநுருத்த

wpengine

அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள்

wpengine