உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…



அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை ஓரளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், நாட்டின் தென்மேல் மற்றும் கிழக்கு கரையோரப்பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும், தென், மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் ஓரளவு கடும் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளைகளில் பனியுடனான வானிலை காணப்படலாம் எனவும் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்னலினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி திகதி இன்று

wpengine

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

wpengine

மேலும் 376 தாயகத்திற்கு

wpengine