உள்நாட்டு செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு…



இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று(04) இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன வெலிகபொல பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களை அண்மித்த இடங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த எச்சரிக்கை 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மில்லிமீற்றரை அதிகரித்துள்ளதனால் , மேலும் மழை தொடருமாயின் மண்சரிவு , பாறை விழுகை , நிலவெட்டுசாய்வு மற்றும் தரை உள்ளிறக்கம் என்பவை தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

2019ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு…

wpengine

யூரோப்பியன் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா! பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

wpengine

2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – கிரிக்கெட் வரலாற்றில் ஓர் திருப்பம்

wpengine