உலக செய்திகள்

எரிமலை வெடிப்பு காரணமாக மூடப்பட்ட பாலி விமான நிலையம் மீண்டும் திறப்பு…



இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் எரிமலை சீற்றம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியா தீவுக் கூட்டங்கள் அடங்கிய நாடு. இங்கு பல தீவுகளில் எரிமலைகள் இந்தோனேசியாவிலுள்ள பாலி தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை கடந்த 22 ஆம் திகதி வெடிக்க தொடங்கியதில் இருந்து கரும்புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுந்தது.

எனவே அதன் அருகே தங்கியிருக்கும் கிராம மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பம் மற்றும் கால் நடைகளுடன் வெளியேறி விட்டனர்.

இந்நிலையில், எரிமலை சீற்றத்தின் காரணமாக பாலி தீவில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்தது. எரிமலையில் இருந்து வெளிவரும் கரும்புகையால் விமான போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று விமான நிலையம் திறக்கப்பட்டது.

Related posts

ஐஎஸ் ஆயுத இயக்கத்தில் இந்தியர்கள் – ஒருவர் கைது

wpengine

பிஜி தீவில் நிலநடுக்கம் – 6.7 ரிக்டரில் பதிவு…

wpengine

115 வருட பழைமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து

wpengine