உள்நாட்டு செய்திகள்

கெசல்கமுவ ஆற்று நீர் பெருக்கெடுப்பு.. – மக்கள் வெளியேற்றம்..



நிலவும் காலநிலையினால் ஹட்டன், கெசல்கமுவ ஆற்றின் நீரேந்துப் பகுதிகள் நிரம்பி வழிவதால், பொகவந்தலாவ எஸ்டேட், நோர்வூட் ஆகிய பகுதிகளில் வீடுகள் சில வெள்ளத்தால் நிரம்பியுள்ளன.

இதையடுத்து, அப்பகுதியில் வாழும் சுமார் 68 குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தேங்கும் நீரின் அளவு அதிகரித்து வருவதையடுத்து கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால், கொத்மலை ஆற்றின் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

#reesh..

Related posts

பௌத்த குருக்களிடமிருந்து 100 சதவீத, ஒழுக்கத்தை எதிர்பார்க்க வேண்டாம் – பகியங்கல ஆனந்த சாகர தேரர்..!

wpengine

இங்கிலாந்தை சொந்த மண்ணில்சுருட்டியெடுத்த பாகிஸ்தான் அணி (VIDEO)

wpengine

பேரூந்து கட்டண திருத்தத்திற்கு மேலதிகமாக  அறவிடப்படும் கட்டணம் தொடர்பில் அறிவிக்க தொ.இலக்கம்….

wpengine