உள்நாட்டு செய்திகள்

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 500 க்கும் மேற்பட்டோர் கைது…



இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 556 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுமுறை பெறாமல் சேவையில் இருந்து இடை விலகியிருந்த அவர்களுக்கு மீண்டும் இராணுவத்தில் இணைவதற்காக பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.

கடந்த 22ஆம் திகதி வரையில் பொதுமன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு நீடித்திருந்தது. இந்நிலையில், கடந்த 23ஆம் திகதியில் இருந்து நேற்று வரையிலான காலப்பகுதியினுள் 556 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 23 பெண் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.

அதேவேளை, பொது மன்னிப்பு காலப்பகுதியில் 11 ஆயிரத்து 232 பேர் சேவையில் இணைந்துள்ளனர்.

அவர்களில் 15 அதிகாரிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வறுமை ஒழிப்பு அபிவிருத்திக்கு குழுவொன்று உருவாக்கம்

wpengine

எதிர்வரும் 2023 வரை இலங்கைக்கு GSP+ வரிச் சலுகை

wpengine

அவன்கார்ட் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிஷங்க ஆணைக்குழு முன்னிலையில்

wpengine