உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மேற்கு, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என்று திணைக்களம் இன்று(28) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசும் எனவும் மேற்கு , சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காலைவேளைகளில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் கடற்கரையோரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில பகுதிகளில் கடும் மழைபெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுக்கூடும் எனவும் இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு

wpengine

இதுவரை 4658 பேர் இராணுவத்திலிருந்து விலக விண்ணப்பம்..

wpengine

பங்களாதேஷ் முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்கள்…

wpengine