விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று…



சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டம் இன்று(27) ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் போட்டியில் தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவின் போது ஒரு விக்கட்டை இழந்த நிலையில் 21 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 6 விக்கட்டுக்களை இழந்து 610 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் விராட் கோலி 213 ஓட்டங்களையும், சதேஸ்வர் புஜாரா 143 ஓட்டங்களையும், முரளி விஜய் 128 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களை பெற்றார்.

முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 205 ஓட்டங்களை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐசிசி டெஸ்ட் தரவரிசை இலங்கை அணியில் ஹேரத்திற்கு வாய்ப்பு.

wpengine

சந்திமாலுக்கு 3வாரங்களுக்கு கிரிக்கெட் ஆட முடியாது..

wpengine

ஆஸிக்கு எதிரான போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்..

wpengine