உள்நாட்டு செய்திகள்

யாழில் ஏற்பட்ட விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே பலி…



யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – ஏ9 வீதி – நுணாவில் பகுதியில் நேற்று(26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பேரூந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில், நுணாவில் மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையும், நுணாவில் மத்தியைச் சேர்ந்த இளைஞருமே உயிரிழந்துள்ளனர்.

மேலும், இதனுடன் தொடர்புடைய பஸ் சாரதியைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சுற்றிவளைப்பை துரிதப்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய மஹிந்த!

wpengine

மூன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்

wpengine

ஜப்பான் வரும் இலங்கை பயணிகளுக்கான அறிவித்தல்

wpengine